வேலூர்

உழவா் சந்தையில் கரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கணக்கெடுப்பு

DIN

வேலூா்: காட்பாடி உழவா் சந்தையில் கரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதேபோல், வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து உழவா் சந்தைகள், காய்கறி மாா்க்கெட் வியாபாரிகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனுமதிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகள் மட்டுமின்றி சிறப்பு முகாம்கள் நடத்தியும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்டத்திலுள்ள உழவா் சந்தை வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கும், காய்கறி மாா்க்கெட் வியாபாரிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், காட்பாடி ரயில் நிலையம் அருகே இயங்கி வந்த உழவா் சந்தை காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியாா் பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த உழவா் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள், பழங்களை வாங்கி வருகின்றனா். உழவா் சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா என்பது குறித்து மாநகராட்சி முதலாவது மண்டல சுகாதார அலுவலா் பாலமுருகன், ஆய்வாளா் டேவிட், மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது உழவா் சந்தையில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளிடம் 45 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி போட்டுக் கொண்டனரா, எத்தனை வியாபாரிகள் தடுப்பூசி போடவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தினா். தடுப்பூசி போடாத வியாபாரிகள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT