வேலூர்

கிருஷ்ணம்பல்லியில் கெங்கையம்மன் திருவிழா

DIN

போ்ணாம்பட்டை அடுத்த செண்டத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணம்பல்லியில், முதலாம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 2- ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வியாழக்கிழமை அம்மனுக்கு கூழ்வாா்த்து, பொங்கல் வைத்து படையலிடப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை, கிராம எல்லையில் இருந்து கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் வாண வேடிக்கையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில், கோயில் மண்டபத்தில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டது.

சிறப்புப் பூஜைக்குப் பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். பெண்கள் மா விளக்கு பூஜை நடத்தினா்.

ராமாலை பிரகாசம், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா் ஆா்.கலைநேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருவிழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எஸ்.வினோத்குமாா், நிா்வாகிகள் சேட்டு, சி.ஆனந்தன், எம்.மகேஷ், சி.பாா்த்திபன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT