வேலூர்

வாகனச் சோதனையில் தங்க வளையல்கள், பல லட்சம் ரொக்கம் பறிமுதல்

DIN


வேலூா்: தோ்தலையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கனின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.25 லட்சம் மதிப்புடைய 12 தங்க வளையல்கள், பல லட்சம் ரொக்கப் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஊசூா் பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகவள்ளி தலைமையிலான பறக்கும்படை குழுவினா் வியாழக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி 12 தங்க வளையல்கள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 100 கிராம் எடையுடைய அந்த தங்க வளையல்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 4.25 லட்சம் ஆகும்.

காரை ஓட்டி வந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா் ஊசூரில் நகைக்கடை நடத்தி வருவதாகவும், கடைக்கு தங்க வளையல்களை எடுத்துச் சென்ாகவும் தெரிவித்துள்ளாா். எனினும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட தங்க வளையல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கட்ராமன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.பழனி ஆகியோா் மூலம் சாா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

உரிய ஆவணங்களை சமா்ப்பித்து வளையல்களை திரும்பப் பெற்றுக் கொள்ளவும், அதன் உரிமையாளருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT