வேலூர்

வேலூரில் மேலும் 433 பேருக்கு கரோனா

DIN

வேலூா்: கரோனா தொற்று பரவல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 433 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை 40,042 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேசமயம், பொது முடக்கம் காரணமாக மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

வேகமாக பரவி வரும் கரோனா தொற்று காரணமாக வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 39,609 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 34,403 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 4,560 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 646 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை புதிதாக 433 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 700-ஐ கடந்திருந்தது. பொது முடக்கம் காரணமாக மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை 611 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை அதைவிட பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சரிந்துள்ளது. அதன்படி, 3 வாரங்களுக்குப் பிறகு புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 500-க்கு கீழ் குறைந்துள்ளது.

இதேபோல், மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT