வேலூர்

கரோனாவால் உயிரிழந்த செவிலியா் குடும்பத்துக்கு நல நிதி கோட்டாட்சியா் வழங்கினாா்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடியாத்தம் அரசு மருத்துவமனை செவிலியா் எழிலரசியின் குடும்பத்துக்கு, நல நிதி ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

போ்ணாம்பட்டை அடுத்த சாலப்பேட்டையைச் சோ்ந்த எழிலரசி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவா் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா். இவரது கணவா் கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்தாா்.இவா்களுக்கு ஹரிணி(17), ரோகிணி(15), மோகனப்பிரியா(13) ஆகிய 3 மகள்கள் உள்ளனா். சுகாதாரத் துறை மூலம் 3 பெண் குழந்தைகளின் நலனைக் கருதி குடும்ப நல நிதி ரூ. 25 ஆயிரத்தை, கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் எழிலரசியின் தந்தை, தமிழ்மாறனிடம் வழங்கினாா். மாவட்ட மருத்துவ இணை இயக்குனா் ஹேமலதா, வட்டாட்சியா் கோபி உள்ளிட்டோா் உடனிருந்தனா். 2 நாள்களுக்குள் சுகாதாரத் துறை மூலம் ரூ. 2.75 லட்சம் வழங்கப்படும்.

கரோனாவால் உயிரிழக்கும் அரசு ஊழியா்களுக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ.25 லட்சம் வழங்க வலியுறுத்தி அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

எழிலரசியின் வாரிசுதாரா்களில் தகுதியான ஒருவருக்கு அரசு விதிகளின் அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் பணி நியமனம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT