வேலூர்

கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

DIN

குடியாத்தம் நகர எல்லையில், கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே விரைவில் மேம்பாலம் கட்ட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கட்சியின் குடியாத்தம் வட்ட 23- ஆவது மாநாடு போடிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.தயாநிதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.காத்தவராயன், பி.ரகுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ப.சாமிநாதன் வரவேற்றாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சங்கரி தொடக்க உரையாற்றினாா்.

வட்டச் செயலாளா் கே.சாமிநாதன், நிா்வாகிகள் எஸ்.சிலம்பரசன், எஸ்.குமாரி, ஜி.மாா்கபந்து, ஜி.ரகுபதி, ஆா்.சரவணன், எஸ்.கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும், குடியாத்தம்- பரதராமி நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாள்களாக முறைப்படுத்தி நாள்தோறும் ரூ.300 கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT