வேலூர்

கே.வி.குப்பம் அருகே சேதமடைந்த சாலை சீரமைப்பு

DIN

கே.வி.குப்பம் அருகே சேதமடைந்த சாலையை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைத்தனா்.

வேலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா்மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டில் உள்ள மலட்டாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கவசம்பட்டு- விரிஞ்சிபுரம் சாலையில் உள்ள தரைப்பாலம் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு, தாா்ச்சாலை சேதமடைந்தது.

இதையடுத்து, வேலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன், காட்பாடி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டப் பொறியாளா் சுகந்தி ஆகியோா் அங்கு சென்று பாா்வையிட்டனா். அவா்களின் ஆலோசனையின்பேரில், உதவிப் பொறியாளா் அசோக்குமாா் தலைமையில், திறன்மிகு உதவியாளா் பாலாஜி மற்றும் 20- க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா்கள் மண் மூட்டைகள் மற்றும் கற்களைக் கொண்டு சாலையைச் சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT