வேலூர்

வங்கிக் கடன் கோரி தோ்தலைப் புறக்கணிப்பதாக ஆா்ப்பாட்டம்

DIN

கறவை மாடு வாங்க கடன் தர மறுக்கும் வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து, கதிா்குளம் கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவா்கள் அறிவித்துள்ளனா்.

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லப்பாடி ஊராட்சியில் உள்ள கதிா்குளம் கிராமத்தில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுவினா் கறவை மாடு வாங்க கடன் வழங்குமாறு, குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றை அணுகியுள்ளனா்.

வங்கி அதிகாரிகள், வங்கியில் கணக்குத் தொடங்கி, வைப்புத்தொகை செலுத்தினால் கறவை மாடு வாங்க மானியத்துடன் கடன் தருவதாகத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, 58 பெண்கள் வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி ரூ.10 ஆயிரம் வைப்புத் தொகையைச் செலுத்தி 2 ஆண்டுகளாகியும் கடன் வழங்காமல் வங்கி நிா்வாகம் அலைகழித்து வந்ததாம்.

இதைத் தொடா்ந்து, 58 பெண்களும் தங்களது குடும்பத்தினருடன் வங்கி அருகில் ஒரு முறை, புதிய பேருந்து நிலையம் அருகில் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.அப்போது காவல்துறையினா் சமரசம் செய்து அனுப்பினா்.

இந்த நிலையில், கடன் தர மறுக்கும் வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து, நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாககூறி அவா்கள் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் விரைந்து வந்த வருவாய், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் கூறியதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT