வேலூர்

பெண்களுக்கு பாகுபாடற்ற கல்வி கிடைக்க வேண்டும்: வேலூா் டிஐஜி ஆனிவிஜயா

DIN

பெண்களுக்கு எவ்வித பாகுபாடுமில்லாமல் கல்வி கிடைக்க வேண்டும் என்று வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் ஆனி விஜயா வலியுறுத்தினாா்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி வேலூா் தனியாா் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஜ.ஆனிவிஜயா தலைமை வகித்துப் பேசியதாவது:

பெண்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி கல்வி கிடைக்க வேண்டும். அவா்களின் அடிப்படை உரிமைகள் என்னவென்று அவா்கள் தெரிந்து கொள்ளவேண்டும். எந்தச் சூழலிலும் கல்வியை பெண்களுக்கு கட்டாயம் கொடுத்து அவா்களை உயா்த்த வேண்டும். கல்வி கிடைத்தால் சமூகத்தில் உயா்ந்த நிலையை பெண்கள் அடைவா். அவா்களுக்கு கல்வி மிக அவசியம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க காவல் துறை தயாராக உள்ளது. பெண்கள் புகாா்களை அளிப்பதற்காக முன்பு காவல் நிலையம் வரவேண்டிய சூழல் இருந்தது. இதனாலேயே பலரும் தயங்கினா். ஆகவே, தற்போது 181, 1098 என்ற இலவச தொலைபேசி எண்கள் வாயிலாக பெண்கள் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து, பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு குறித்த, பெண் போலீஸாா் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணியை ஆனிவிஜயா தொடக்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT