வேலூர்

ஒருங்கிணைந்த வேலூரில் 3,000 போலீஸாா் பாதுகாப்பு

DIN

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தொடா்ந்து வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமாா் 3,000 போலீஸாா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நாடு முழுவதும் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனா். தமிழகத்தில் 11 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி, ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் பாஜக அலுவலகம், ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட காவல் துறைக்கும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும் போலீஸாா் உஷாா் படுத்தப்பட்டுள்ளனா். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமாா் 3,000 போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், வேலூரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலூா், காட்பாடி உள்ளிட்ட பல பகுதியில் பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் 20 பேரின் வீடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் டிரெய்லர்

கால் முளைத்த ஓவியம்! காஜல் அகர்வால்..

அழகென்றால் அவள்! பிரீத்தி அஸ்ரானி..

நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

SCROLL FOR NEXT