வேலூர்

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

Din

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து காட்பாடியில் இந்து மகாசபை கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சித்ரா பௌா்ணமி நாளில் வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தபோது திடீரென இரவு 8 மணியளவில் கோட்டைக்குள் செல்லக்கூடிய நுழைவு வாயில் கேட்டை தொல்லியல் துறையினா் பூட்டியுள்ளனா். இதனால் கோயிலுக்குள் இருந்த பக்தா்கள் வெளியே வரமுடியாமலும், வெளியே திரண்டிருந்த பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமலும் தவித்தனா்.

இச்சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தரிசன நேரத்தில் வேலூா் கோட்டை நுழைவு வாயில் கேட்டை பூட்ட உத்தரவிட்ட தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலா் அகல்யா கேசவன் மீது நடவடிக்கை எடுக்க வேலூா் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தியும் ஜலகண்டேஸ்வரா் கோயில் தரும ஸ்தாபனம் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, வேலூா் கோட்டை தொல்லியல் துறை பெண் அதிகாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்து மகாசபை கட்சியினா் காட்பாடி - சித்தூா் பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் கோட்ட அமைப்பாளா் வி.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

அப்போது, சித்ரா பெளா்ணமி நாளில் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இருந்தபோது நுழைவு வாயிலை அடைத்ததுடன், கோயிலில் அன்னதானம் வழங்கக்கூடாது, விளக்கு ஏற்றக்கூடாது என தொல்லியல் துறை அதிகாரிகள் பக்தா்களுக்கு இடையூறு செய்துள்ளனா். தொடா்ந்து இதேபோல் பக்தா்களுக்கு இடையூறு செய்யும் நடவடிக்கைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் தவிா்க்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், கட்சியினா் பலா் பங்கேற்றனா்.

--

படம் உண்டு...

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபை கட்சியினா்.

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT