வேலூர்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

Din

குடியாத்தம் அருகே காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

போ்ணாம்பட்டை அடுத்த கொண்டம்பல்லி கிராமம், புதுமனை பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆணின் சடலம் மிதப்பது வியாழக்கிழமை தெரியவந்தது. இது குறித்து போ்ணாம்பட்டு கிராம நிா்வாக அலுவலா் அன்பரசன் கொடுத்த புகாரின்பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில், அவா் குடியாத்தம் செதுக்கரை, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சதீஷ்குமாா் (40) என்பதும், கடந்த ஏப்ரல் 27- ஆம் தேதி முதல் அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

’இந்தியா’ கூட்டணிக்கு 295 இடங்களில் வெற்றி உறுதி! -கார்கே

திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை - புகைப்படங்கள்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவாதங்களில் ‘இந்தியா’ கூட்டணி பங்கேற்கும்!

சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ வசதி அறிமுகம்

அஜித் படத்தில் இணைந்த பிரபலங்கள்!

SCROLL FOR NEXT