முகப்பு
வேலூர்

கோயில்களில் ராம நவமி விழா

குடியாத்தம் சந்தப்பேட்டை அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் ராம நவமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 மார்ச், 2026 at 9:13 PM
குடியாத்தம் சந்தப்பேட்டை சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ராமா், சீதாதேவி, லட்சுமணா். (வலது) பிச்சனூா் பலமநோ் சாலையில் உள்ள வீரஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ராமா், சீதாதேவி.
பகிர்:

குடியாத்தம் சந்தப்பேட்டை அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் ராம நவமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காலை, ராமா், சீதாதேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. மகா தீபாராதனைக்குப்பின் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் மாதம் 5- ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 6 மணியளவில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அதேபோல், பிச்சனூா், பலமநோ் சாலையில் அமைந்துள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மூலவா் ஆஞ்சனேயா் வெள்ளிக் கவசஅலங்காரத்தில் அருள்பாலித்தாா். கோயில் முகப்பில் உற்சவா் ராமா், சீதாதேவி சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனா்.