சாலை விபத்தில் விவசாயி சாவு
மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ராக்கிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ராக்கிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி உயிரிழந்தார்.
அன்னூர் அருகே உள்ள ராக்கிபாளையத்தை சேர்ந்தவர் ஓதிசாமி. இவரது மகன் கணேசமூர்த்தி (37), விவசாயி. இவருக்குத் திருமணமாகவில்லை. இந்நிலையில், காரமடை அருகே தாத்தம்பாளையம் கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு கணேசமூர்த்தி செவ்வாய்கிழமை இரவு சென்றுள்ளார். பின்னர் புதன்கிழமை காலை 7 மணி அளவில் அவர் தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளார். அப்போது, பொகலூர் அருகே இந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்து கொண்டிருந்த லாரி மோதியது.
இதில், கணேசமூர்த்தி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து சிறுமுகை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.