முகப்பு
கோயம்புத்தூர்

சித்தாபுதூரில் பொதுமக்கள் சாலை மறியல்

கோவை, சித்தாபுதூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை காலி செய்ய மறுத்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:32 am IST
பகிர்:

கோவை, சித்தாபுதூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை காலி செய்ய மறுத்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பைக் காலி செய்யுமாறு வாரியம் சார்பில் சில நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள் அங்குள்ள பொதுமக்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு கூறினர். அப்போது, பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் குடியிருப்புக்குள் சென்ற அதிகாரிகள் சிலர் அங்கிருந்த முதாட்டி ஒருவர் உள்பட பொதுமக்கள் சிலரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சித்தாபுதூர் சாலையின் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்டூர் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், குடியிருப்புகளை காலி செய்ய மறுத்த பொதுமக்கள் தொடர் போரட்டத்தில் 
ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments