சுல்தான்பேட்டையில் 8 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்
விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூலூர் அருகே சுல்தான்பேட்டையில்
விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூலூர் அருகே சுல்தான்பேட்டையில் 8 ஆவது நாளாக திங்கள்கிழமையும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகளின் கூட்டமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி துவக்கினர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு நூதன வடிவங்களில் போராடி வரும் விவசாயிகள், கடந்த இரண்டு நாள்களாக 12 விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 25) மொட்டையடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சுல்தான்பேட்டை கள ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.