துணி துவைக்கும் இயந்திரத்தில் நாகப் பாம்பு
மதுக்கரை அருகே 3 அடி நீளமுள்ள நாகப் பாம்பு மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுக்கரை அருகே 3 அடி நீளமுள்ள நாகப் பாம்பு மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த மாசேகவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது வீட்டில் துணி துவைக்கும் இயந்திரத்தில் பாம்பு இருந்தது
திங்கள்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ், நேதாஜி பாம்புகள் அறக்கட்டளையைச் சேர்ந்த சுரேந்திரனுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த சுரேந்திரன் இயந்திரத்தில் இருந்த 3 அடி நீளமுள்ள நாகப் பாம்பை உயிருடன் பிடித்து மதுக்கரை வனத் துறையினரிடம் ஒப்படைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.