அதிமுக மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: கார்த்திக் எம்.எல்.ஏ. அறிவிப்பு
வீட்டை முற்றுகையிடுவோம் என்ற அதிமுக எம்.எல்.ஏ.வின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்றும் சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை
வீட்டை முற்றுகையிடுவோம் என்ற அதிமுக எம்.எல்.ஏ.வின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்றும் சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை எதிர்த்து திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும் திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தடையற்ற குடிநீர் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டால் திமுக எம்.எல்.ஏ. கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று அதிமுக எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார் சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தபெதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தைத் தொடர்ந்து கார்த்திக் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் குடிநீர் வியஊயோகத்துக்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் அரசு மேற்கொண்டுள்ள மக்கள் விரோத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் சார்பில் 100 வார்டுகளிலும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சூயஸ் நிறுவனம் குறித்தும், மாநகராட்சியின் ஒப்பந்தம் குறித்தும்,
அந்த நிறுவனத்துக்கு 21 ஆண்டுகளுக்கு பராமரிப்புஏஈ பணி கொடுப்பதால் எந்த அளவுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது குறித்தும் மக்களுக்கு விளக்கும் வகையில் துண்டறிக்கை விநியோகம் செய்ய உள்ளோம். 31ஆம் தேதி மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
போராட்டத்தை நசுக்கி, ஒடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட் டுள்ளது. அதன் ஒருபகுதியாகவே எனது வீட்டை முற்றுகையிடுவேன் என்று அதிமுக எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், நாங்கள் அதிமுகவின் உருட்டல், மிரட்டல்களுக்கு அஞ்சி பின்வாங்க மாட்டோம். தொடர்ந்து மக்களின் ஆதரவுடன் அவற்றை முறியடிப்போம் என்றார்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார் பேசும்போது, கார்த்திக் எம்.எல்.ஏ.வின் வீட்டை முற்றுகையிடுவேன் என்ற அதிமுக எம்.எல்.ஏ.வின் அறிவிப்பு கண்டனத்துக்குரியது. அவர் தனது அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.