கோயம்புத்தூர்

பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நஷ்டஈடு

DIN

வால்பாறையில் பணியின்போது உயிரிழந்த எஸ்டேட் தொழிலாளியின் குடும்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவின்பேரில் நஷ்ட ஈடு தொகை வழங்கப்பட்டது.
வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட்டில் பணியாற்றிவந்தவர் செல்லத்துரை. இவர்  எஸ்டேட் தொழிற்சாலையில் 2013-ஆம் ஆண்டு பணியாற்றி கொண்டிருந்தபோது உயிரிழந்தார். இவருக்கு எஸ்டேட் நிர்வாகம் நஷ்டஈடு தொகை தர மறுத்தது. 
இதனையடுத்து செல்லத்துரை குடும்பத்தினர் அதிமுக தொழிற்சங்கம் மூலம் வழக்குத் தொடர்ந்தனர். கோவை தொழிலாளர் நலத் துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்,  செல்லத்துரை குடும்பத்துக்கு நஷ்ட ஈடு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து எஸ்டேட் நிர்வாகத்தினரிடம் இருந்து பெறப்பட்ட  ரூ. 5 லட்சத்து,  64 ஆயிரத்து, 227 தொகையை இறந்த தொழிலாளி செல்லத்துரை மனைவி தவமணியிடம் வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு வழங்கினார். 
வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வி.அமீது,  துணைத் தலைவர் மா.மயில்கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT