கோயம்புத்தூர்

நிலங்களைக் கையகப்படுத்த முடியாததால் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் தாமதம்

DIN

எஸ்டேட் நிலங்களை கையகப்படுத்த முடியாததால் வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இல்லாததால், இங்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
 இதனிடையே  வால்பாறையில் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்க இரண்டு வருடத்துக்கு முன்னரே  தனியார் எஸ்டேட் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் நில அளவைப் பணியும் மேற்கொண்டனர். ஆனால், அதன்பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், தேர்வு செய்யப்பட்ட நிலங்களில் எஸ்டேட் நிர்வாகத்தினர் விவசாயம் செய்யத் தொடங்கினர். சுற்றுலாத் துறை சார்பில்  கொடைக்கானல், உதகை, உள்ளிட்ட அனைத்து மலைப் பிரதேசங்களிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் தங்கும் விடுதிகள் அமைத்துள்ளனர். ஆனால், வால்பாறையில் சுற்றுலாத் துறை சார்பில் எந்த ஒரு வளர்ச்சிப் பணிளையும் மேற்கொள்ள அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும், வளர்ச்சிப் பணிகளுக்கு எஸ்டேட் நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்வராமல் இருப்பதாலேயே தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவதாகவும் வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு அமைப்பினர் கூறுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT