கோயம்புத்தூர்

உயிரியல் சார் சுகாதார அறிவியல் கல்வி நெறிமுறைகள் குறித்து பயிற்சி

DIN

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் உயிரியல் சார் நெறிமுறைகள் குறித்த மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
 தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், யுனெஸ்கோ உயிரியில் சார் நெறிமுறைகள் இந்திய அமைப்பு ஆகியன இணைந்து கோவை மருந்தாக்கியல் கல்லூரி,  ஸ்ரீராமகிருஷ்ணா இணை மருத்துவக் கழகம் மற்றும் கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு உயிரியில் சார் நெறிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பை நடத்தியது.  இதற்கான தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது.
 இந்தப் பயிற்சி வகுப்பில் மருத்துவம், பல் மருத்துவம், மருந்தாக்கியல் மற்றும் செவிலியர் ஆகிய துறைகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  இதில் உயிரியியல் சார் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 
 இதற்காக உருவாக்கப்பட்ட பாடத் திட்டத்தின் மூலம் இதுவரையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இணை சுகாதார அறிவியல் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT