பொலிவுறு நகரம் திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டம்
கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்ட செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்ட செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது.
இதில் கோவையில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஜெர்மன் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் கட்டுமானங்கள், கட்டடக் கழிவுகள் மேலாண்மை, மரக்கன்று நடவு செய்தல், வீடுகளில் சூரிய சக்தி மின் விளக்குகள் பயன்பாடு, பசுமைக் கட்டடங்கள் மற்றும் நகரில் மேற்கொள்ள வேண்டிய பசுமைப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.