முகப்பு
கோயம்புத்தூர்

ஜி.ஆர்.ஜி. நிறுவனர் நூற்றாண்டு விழா

கோவை ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஜி.ஆர்.ஜி.கோவிந்தராஜூலுவின் நூற்றாண்டு

Updated On : 23 ஜனவரி 2019, 9:22 am IST
பகிர்:

கோவை ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஜி.ஆர்.ஜி.கோவிந்தராஜூலுவின் நூற்றாண்டு விழா கிருஷ்ணம்மாள் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஜி.ஆர்.ரங்கநாதன் தலைமை தாங்கினார். மணிபால் கல்வி மைய இயக்குநர் டி.வி.மோகன்தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கெளரவ விருந்தினராக சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் துணைத் தலைவர் ஜி.செளந்தரராஜன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், கவின் கேர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவருக்கு டி.வி.மோகன் தாஸ் வழங்கினார்.
 அதேபோல், தொழில் துறை, அரசுப் பணிகளில் சேவையாற்றி வரும் வனிதா மோகன், டாக்டர் பூனம், காவல் துறை அதிகாரி இ.எஸ்.உமா, நடனக் கலைஞர் லாவண்யா சங்கர் உள்ளிட்டோருக்கும் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜி.ஆர்.ஜி. ஃபுட் டெஸ்டிங் ரசாயனக் கூடம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அன்னபூர்ணா சீனிவாசன் உள்ளிட்ட 5 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 இந்த விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் நந்தினி ரங்கசாமி, தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.