முகப்பு
கோயம்புத்தூர்

பாதுகாப்பு தொழில் வழித்தடம்: பிரதமருக்கு தொழில் வர்த்தக சபை நன்றி

தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில்

Updated On : 23 ஜனவரி 2019, 9:20 am IST
பகிர்:

தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவை இந்திய தொழில் வர்த்தக சபை நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைப்பின் தலைவர் வி.லட்சுமிநாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, சேலம், ஓசூர், சென்னை ஆகிய நகரங்களை இணைத்து ரூ.3,100 கோடி முதலீட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் இந்தக் கட்டமைப்பின் மூலம் உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான குறு, சிறு, நடுத்த தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதேபோல், பாதுகாப்புத் துறையின் புத்தாக்கம், வளர்ப்பு மையமாக கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமருக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள லட்சுமிநாராயணசாமி, இதற்காக உதவி செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த தொழில் வழித்தடங்களில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.