கோயம்புத்தூர்

ஆதிமாதையனூரில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

DIN

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்துக்கு உள்பட்ட ஆதிமாதையனூர் கிராமத்தில் இரவு நேரத்தில் விளை நிலங்களில் காட்டுயானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
 ஆதிமாதையனூர் கிராமத்தை ஒட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 
இங்குள்ள மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
 இந்நிலையில் கடந்த 4 நாள்களாக வனத்தில் இருந்து வெளியேறிய 8 காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனி காவலர் பாதுகாப்புக்காக அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் கைது

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

SCROLL FOR NEXT