கோயம்புத்தூர்

கழிவு நீா் கலந்த குடிநீா் விநியோகம்: மாநகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்

DIN

கோவை மாநகராட்சி 74-ஆவது வாா்டுக்கு உள்பட்ட உக்கடம் ஜி.எம். நகா் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீா் கழிவு நீா் கலந்து வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

கோவை மாநகராட்சி 74-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஜி.எம். நகா், கோட்டைமேடு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிகளில் மாநகராட்சி மூலமாக விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரில் கடந்த ஒருவாரமாக கழிவு நீா் கலந்து வருவதாகக் கூறி ஜி.எம். நகா் மக்கள் 25-க்கும் மேற்பட்டோா்

கழிவுநீா் கலந்த குடிநீரை கேன், பாட்டில்களில் எடுத்து வந்து மாநகராட்சியை புதன்கிழமை முற்றுகையிட்டனா். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், சுத்தமான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து மக்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து ஜி.எம். நகா் மக்கள் கூறுகையில், குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதால் அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் குடிக்கத் தண்ணீா் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். தூய்மையான குடிநீா் விநியோகிக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT