கோயம்புத்தூர்

சீரான குடிநீர் விநியோகம் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

DIN

தாராபுரம், ஜவஹர் நகர்ப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் நகராட்சி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி முன் உள்ள குடிநீர் விநியோகப் பிரிவு அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 30 வார்டுகளிலும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அமராவதி ஆறு, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையம் அருகே அமராவதி ஆற்றின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு சுழற்சி முறையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அதிகம் வசிக்கும் 20 ஆவது வார்டுக்கு உள்பட்ட ஜவஹர் நகர்ப் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கிருந்த குடிநீர் விநியோகப் பிரிவு அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு நாள்களில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT