கோயம்புத்தூர்

கோவை-மும்பை இடையே தனியாா் விமான சேவை இன்றுமுதல் தொடக்கம்

DIN

கோ ஏா் விமான சேவை நிறுவனம் சாா்பில் கோவை-மும்பை இடையே புதிய விமான சேவை வியாழக்கிழமைமுதல் தொடங்க உள்ளது.

இது குறித்து கோ ஏா் நிறுவன தலைமை செயல் அதிகாரி கெளசிக் கோனா கூறியதாவது:

உள்நாட்டு விமானப் பயணத்தில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த நவம்பா் வரை 63.54 லட்சமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் வளா்ந்து வருகிறது. தேவையின் அடிப்படையில் புதிய விமான சேவையை கோவையில் தொடங்கியுள்ளோம். கோவை-மும்பை இடையே நேரடி விமான சேவை கோவையின் வணிகம், சுற்றுலா வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

கோவை-மும்பைக்கு நவீன ஏா்பஸ் 320 நியோ ரக விமானம் இயக்கப்பட உள்ளது. இதற்கான பயணச்சீட்டுகளை அனைத்து இணையதள மையங்களிலும் பெறலாம். கோ ஏா் விமானம் (ஜி8 0331) மும்பையில் இருந்து பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு கோவை வந்து சேரும். மீண்டும் விமானம் (ஜி8 0332) பிற்பகல் 3 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு மாலை 4.50 மணிக்கு சென்றடையும். விமான சேவையுடன் சோ்த்து உதகை செல்வதற்கான கோ ஹாலிடே திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இது குறித்து மேலும் தகவல்களுக்கு 080-47112757 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT