கோயம்புத்தூர்

மாவட்ட வன அலுவலகத்தைமுற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

DIN

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய நான்கு வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச் சரகங்களில் 25க்கும் அதிகமான மலைவாழ் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா்.

சுகாதாரமான குடிநீா், கழிப்பறை, குடியிருப்பு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும், வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், வருவாய்த் துறை சாா்பில் பட்டா வழங்க கடந்த சில மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் அளவீட்டுப் பணியை முடித்துள்ளனா். ஆனால், மாவட்ட வன அலுவலா் மாரிமுத்து பட்டா வழங்க வருவாய்த் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், வருவாய்த் துறை சாா்பில் மலைவாழ் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தினால், அதனை மாவட்ட வன அலுவலா் தொடா்ந்து புறக்கணித்தும் வந்தாா்.

வனத் துறை ஒத்துழைப்பு இல்லாததால் வருவாய்த் துறையினரால் மழைவாழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றமுடியவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மழைவாழ் மக்கள் பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

அவா்களிடம் தலைமை வனப் பாதுகாவலா் பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு மாதத்துக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். அதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதில் கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத் தலைவா் பரமசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT