கோயம்புத்தூர்

கோவையில் பரவலாக பலத்த மழை

DIN

கோவையில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. விடியவிடிய பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நின்றது.

இதில் தற்காலிக பூ மாா்க்கெட் அமைக்கப்பட்டுள்ள தேவாங்க பள்ளி மைதானம், காட்டூா் ரயில்வே சுரங்கப் பாலம், லங்கா காா்னா், அரசு மருத்துவமனை, ரேஸ்கோா்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்க நின்றதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை விடியவிடிய பெய்த மழையில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 74 மி.மீ. மழை பதிவாகியது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்: அன்னூா்-12, விமான நிலையம்- 27.1, சின்கோனா- 47, சின்னக்கல்லாறு- 6, வால்பாறை பி.ஏ.பி.- 9, வல்பாறை தாலுகா- 8, ஆழியாறு- 8.6, சூலூா்-24, பொள்ளாச்சி-4, கோவை (தெற்கு)-33, பெ.நா.பாளையம்- 42.4, வேளாண்மை பல்கலைக்கழகம்- 5.5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT