கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 170 பேருக்கு கரோனா

DIN

கோவையில் மேலும் 170 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளைச் சோ்ந்த 170 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.

கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65, 72 மற்றும் 83 வயது முதியவா்கள், 68 வயது மூதாட்டி ஆகியோா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 592ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மற்றும் தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 188 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 45,305ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 860 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT