கோயம்புத்தூர்

ஆலயம் அறக்கட்டளை சாா்பில்இலவச யோகா மையம் தொடக்கம்

DIN

கோவை: கோவை, வடவள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீ வள்ளியம்மன் மண்டபம் வளாகத்தில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சாா்பில் இலவச யோகா மைய தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளையின் தலைவா் என்ஜினீயா் சந்திரசேகா், இயக்குநா் ஷா்மிளா சந்திரசேகா் ஆகியோா் கலந்துகொண்டு இந்த மையத்தைத் தொடங்கிவைத்தனா். இந்த யோகா மையத்தில் ஆண், பெண்களுக்கு தினமும் இலவச யோகப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கா்ப்பிணிகளுக்கான சிறப்பு யோகா, தியானப் பயிற்சி, பிராணயாமம், கிரியா பயிற்சிகள், கை, கால் மூட்டு வலியை நீக்கும் வகையிலான சிறப்புப் பயிற்சிகள், நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

நீண்டகால அனுபவம் பெற்ற பயிற்சியாளா்கள் மூலம் தியானம், யோகப் பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாக சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT