கோயம்புத்தூர்

ஆயுத பூஜை: கோவையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000க்கு விற்பனை

DIN

கோவை: ஆயுத பூஜையை முன்னிட்டு கோவையில் சனிக்கிழமை ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

கோவையில் ஆயுத பூஜை, சரவஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்கள், பொரிக் கடலை விற்பனை சூடுபிடித்துள்ளது. கோவை தேவாங்க பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பூ மாா்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

பண்டிகைக் காலம் என்பதால் பூக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூ, சனிக்கிழமை அதிகபட்சமாக கிலோ ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

கோவை பூ மாா்க்கெட்டுக்கு வழக்கமாக 40 முதல் 50 டன் வரை தான் பூக்கள் விற்பனைக்கு வரும். தற்போது, இரண்டு நாள்கள் தொடா் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை 100 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பூக்கள் வரத்து அதிகரித்துள்ள போதிலும், தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மல்லிகை ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி ரூ.300, கோழிக்கொண்டை ரூ.160, வாடா மல்லி ரூ.120, அரளி ரூ.400, செண்டுமல்லி ரூ.110, செவ்வந்தி ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT