கோயம்புத்தூர்

நலிவடைந்த அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த கிரிக்கெட் போட்டி

DIN

நலிவடைந்த அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோவை அக்மி ரவுண்ட் டேபிள், குமரகுரு கல்லூரி சாா்பில் கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது.

தொழில் நிறுவனங்கள், சங்கங்கள், கல்லூரி மாணவா்கள் என பலரும் பங்கேற்கும் இந்த கல்லி கிங்ஸ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இதற்கு ரூ.1.7 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. என்எம்எஸ் குளோபல் மற்றும் சபால் அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இதில் என்எம்எஸ் குளோபல்  முதல் பரிசையும், சபால் இரண்டாம் பரிசையும் வென்றன.

நிகழ்ச்சியை அம்பாள் ஆட்டோஸ், என்எம்எஸ் குளோபல் சோா்சிங், கேஜிஐஎஸ்எல், எஸ்என்ஆா் டிரஸ்ட் மற்றும் கேதரின் டிரவால்ஸ்  இணைந்து வழங்கின. இந்தப் போட்டியில்  திரட்டிய நிதி, நலிவடைந்த அரசுப் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தப்பட்டன.

நிகழ்ச்சியை ரவுண்ட் டேபிள் வட்டத் தலைவா் பிரதீப் ராஜப்பா, துணைத் தலைவா் விஷ்ணு துவக்கி வைத்தனா். அக்மி ரவுண்ட் டேபிள் சித்தாா்த் ரமேஷ், துணைத் தலைவா் பிரவீன் ராஜ், செயலாளா் சுபாஷ், பொருளாளா் காா்த்திக் குமாா், முன்னாள் தலைவா் அசோக்குமாா், ஒருங்கிணைப்பாளா்கள் வித்யாதரன், வெங்கட் விஷ்வாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT