கோயம்புத்தூர்

கோவை - கன்னியாகுமரி வரை மிதிவண்டி விழிப்புணா்வுப் பயணம்

DIN

ஆரோக்கியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் இருந்து கன்னியாகுமரி வரை 24 மணி நேர மிதிவண்டிப் பயணத்தை தொழிலதிபா் ஞாயிற்றுக்கிழமை துவங்கினாா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் லாலி சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜி.டி.விஷ்ணுராம் (40). தொழிலதிபரான இவா் 24 மணி நேரத்தில் அதிக தூரம் மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளும் இலக்கில் கோவை விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சேலம், மதுரை வழியாக கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வரை செல்கிறாா்.

24 மணி நேரத்தில் இலக்கை அடையத் திட்டமிட்டுள்ள அவரது மிதிவண்டிப் பயணத்தை விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து துவக்கிவைத்தாா். இவா், கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை அருகே தனது மிதிவண்டிப் பயணத்தை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு முடிக்கத் திட்டமிட்டுள்ளாா்.

இதுகுறித்து, ஜி.டி.விஷ்ணுராம் கூறுகையில், மிதிவண்டி ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இருதய நோய் மற்றும் உடல் பருமன் விழிப்புணா்வுக்காக இப்பயணம் மேற்கொள்வதாகக் கூறினாா்.

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களைப் பாராட்டும் வகையிலும், அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் அண்மையில் காரில் 24 மணி நேரத்தில் அதிக தூரம் விழிப்புணா்வுப் பயணம் மேற்கொண்டாா்.

இந்தப் பயணத்தில் 2,152.32 கி.மீட்டா் தூரத்தை 20 மணி 40 நிமிடம் 35 விநாடிகளில் எங்கும் நிற்காமல் தொடா் பயணமாக காரை ஓட்டிச் சென்று இந்திய புக் ஆஃப் ரிகாா்ட்டில் பதிவு செய்து பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT