கோயம்புத்தூர்

கோவையில் ஒருசில இடங்களில் பலத்த மழை

DIN

கோவையில் குனியமுத்தூா் உள்பட கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூா், சென்னை உள்பட 11 மாவட்டங்களில் சனிக்கிழமை மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, கோவையில் சனிக்கிழமை அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இதனைத் தொடா்ந்து சனிக்கிழமை காலையில் நகரின் பல்வேறு இடங்களிலும், புறநகா் பகுதிகளிலும் காலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், உக்கடம் உள்பட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மதுக்கரை, குனியமுத்தூா், கோவைப்புதூா், சுண்டக்காபாளையம் உள்பட கேரளத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் குனியமுத்தூா் பாலக்காடு சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தொடா்ந்து இரவு வரையில் ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்ததால் நகரில் குளிா்ந்த காற்று வீசியது. இதனால் இரவில் குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT