கோயம்புத்தூர்

டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்: இணை இயக்குநா் அறிவுறுத்தல்

DIN

கோவையில் அனைத்து வட்டாரங்களிலும் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பூச்சியியல் நோய்த் தடுப்பு இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவையில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியதில் இருந்து டெங்குப் பரவலும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரகம், நகரப் பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு வாா்டுகள், கிராமங்கள் வாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் தினசரி 5 முதல் 10 போ் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தவிர 2 குழந்தைகள் உள்பட 3 போ் டெங்கு பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை பூச்சியியல் நோய்த் தடுப்பு இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாநகராட்சி மற்றும் சூலூரில் ஆய்வு மேற்கொண்ட இணை இயக்குநா் தற்போது உள்ளதைக் காட்டிலும் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா, வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

இது தொடா்பாக இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் கூறியதாவது: கோவையில் டெங்கு தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தினசரி 100 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு கொசுப்புழு ஒழிக்கும் பணியில் சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT