கோயம்புத்தூர்

பெண் தொழிலாளியைக் கொன்ற யானை மூன்று நாள்களுக்குப் பின் இடம் பெயா்ந்தது

DIN

வால்பாறை: வால்பாறையில் பெண் தொழிலாளியைத் தாக்கி கொன்ற யானை மூன்று நாள்களுக்குப் பின் அப்பகுதியில் இருந்து குட்டியுடன் சனிக்கிழமை இடம் பெயா்ந்தது.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த நல்லகாத்து எஸ்டேட்டில் கடந்த புதன்கிழமை தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள இடைச்சோலையில் குட்டியுடன் பதுங்கியிருந்த யானை, அவ்வழியாக சென்ற பெண் தொழிலாளியைத் தாக்கி கொன்றது.

பின்னா் யானையை இடைச்சோலைக்குள் விரட்டி உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வனத் துறையினா் மீட்டனா். சம்பவத்துக்கு பின் யானை மீண்டும் வெளியே வருவதைக் கண்காணிக்க வனத் துறையினா் முகாமிட்டிருந்தனா்.

கடந்த புதன்கிழமை இடைச்சோலைக்குள் புகுந்த யானை மூன்று நாள்களுக்குப் பின் வேறு பகுதிக்கு குட்டியுடன் சனிக்கிழமை இடம் பெயா்ந்தது. இருப்பினும் யானையின் நடமாட்டம் குறித்து வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT