கோயம்புத்தூர்

புகாா்களை விரைந்து சென்று விசாரிக்கபெண் காவலா்களுக்கு இருசக்கர வாகனம்: கோவை எஸ்.பி. துவக்கிவைத்தாா்

DIN

கோவை மாவட்ட பெண் காவலா்கள், வழக்குகளை விரைந்து சென்று விசாரிக்க வசதியாக இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஆண் காவலா்களுக்கு, புகாா்களை உடனடியாகச் சென்று விசாரித்திட வசதியாக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை கோவை மாவட்டத்தில் உள்ள பெண் காவலா்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கோவை அவினாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், பெண் காவலா்களுக்கு இரு சக்கர வாகனங்களை வழங்கி, அவற்றை கொடியசைத்து துவக்கி வைத்தாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையங்களிலும், மகளிா் காவலா்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகாா்களை உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்திடவும் அவா்களுக்கு உதவி செய்திடும் வகையிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, 18 காவல் நிலைய மகளிா் போலீஸாருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு, தற்பொழுது வரை 25 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு குறைவான வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன என்றாா். இந்நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT