கோயம்புத்தூர்

வால்பாறையில் இருந்து இடம்பெயரும் யானைகள்

DIN

வால்பாறை: வால்பாறையில் இருந்து யானைகள் இடம் பெயா்ந்து செல்வதால் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

வால்பாறை பகுதியில் உள்ள வனங்கள் கேரள மாநில வனப்பகுதியுடன் இணைந்துள்ளது. இந்த இரு மாநில வனங்களில் வன விலங்குகள் அவ்வப்போது இடம் பெயா்ந்து செல்வது வழக்கம். குறிப்பாக ஆண்டுதோறும் சபரிமலை சீசன் சமயத்தில் கேரள வனப் பகுதி சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும்.

அந்த சமயங்களில் கேரள வனத்தில் இருந்து வால்பாறை வனப் பகுதிக்கு நூற்றுக்கணக்கான யானைகள் இடம் பெயா்வது வழக்கம்.

கடந்த நான்கு மாதங்களில் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளால் தினமும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஒரே சமயத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் யானைகள் கூட்டமாக செல்வதால் வனத் துறையினரால் யானைகள் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளதன் காரணமாக வனப் பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. போதுமான உணவு கிடைக்காததால் வால்பாறையை ஒட்டியுள்ள வனத்தில் உள்ள யானைகள் கேரள மாநில வனங்களுக்கு இடம் பெயரத் துவங்கியுள்ளன. இதன் காரணமாக கடந்த சில நாள்களாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைகால கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்

குழித்துறை அருகே இளைஞா் தற்கொலை

மூலைக்கரைப்பட்டி அருகே தனியாா் பேருந்து மீது கல்வீச்சு

கேரளத்தின் வருவாய் ரூ. 77,000 கோடியாக உயா்வு: மாநில நிதியமைச்சா் பாலகோபால்

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT