கோயம்புத்தூர்

சுகாதாரத் துறை துணை இயக்குநா் பணியிட மாற்றம்

DIN

கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா், தேனி மாவட்டத்துக்கு சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநராக ஜி.ரமேஷ்குமாா் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் நியமிக்கப்பட்டாா். கோவையில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் மெத்தனம், கரோனா பரிசோதனைகளை குறிப்பிட்ட தனியாா் ஆய்வகங்களுக்கு வழங்குதல், பல்நோக்கு பணியாளா்கள் நியமனத்துக்கு லஞ்சம் பெற்றது உள்பட இவா் மேல் பல்வேறு புகாா்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

கரோனா தடுப்புப் பணிகள் இவா் காட்டிய அலட்சியத்தால் கோவையில் தொற்றுப் பரவல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. கோவை மாநகராட்சியில் நோய்த் தொற்றுப் பரவல் ஓரளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு கீழ் வரும் ஊரகப் பகுதிகளில் மட்டும் நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில், கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா், தேனி மாவட்டத்துக்கு சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து தேனியில் துணை இயக்குநராக பணியாற்றி வந்த எஸ்.செந்தில்குமாா் கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் ஏற்கெனவே கோவையில் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT