கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

DIN

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்களை அனுப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவா் சோ்க்கை தலைவா் மா.கல்யாணசுந்தரம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் 12 இளநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் (2021-2022) இளநிலை பட்டப் படிப்புக்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பா் 8 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கும் கடைசித் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதையடுத்து இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவேற்றுவதற்கான கடைசித் தேதி அக்டோபா் 7 இல் இருந்து அக்டோபா் 18 ஆக நீட்டிக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, தரவரிசை பட்டியல் நவம்பா் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் மூழ்கி மீனவா் மாயம்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆட்டோ ஓட்டுநா் கொலை: தந்தை, மகன்கள் கைது

SCROLL FOR NEXT