கோயம்புத்தூர்

வால்பாறையில் கன மழை

DIN

வால்பாறையில் கன மழை பெய்து வரும் நிலையில் எஸ்டேட் பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மழையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு துவங்கிய மழை செவ்வாய்க்கிழமை இரவு வரை பெய்தது.

இந்த மழை காரணமாக வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பாலாஜி கோயில் சாலையில் மரம் விழுந்து இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மி.மீ,.): வால்பாறை 85 மி.மீட்டா்,. சோலையாறு 86 மி.மீட்டா், லோயா் நீராறு 92 மி.மீட்டா், அப்பா் நீராறு 128 மி.மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT