கோயம்புத்தூர்

மெகா தடுப்பூசி முகாம்: 1.13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

DIN

கோவையில் 3 ஆவது வாரமாக நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 1.13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 3 ஆவது வாரமாக மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 369 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 9 ஆயிரத்து 249 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் என மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 618 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஏற்கெனவே முதல் வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 1.51 லட்சம் பேருக்கும், இரண்டாவது வாரத்தில் 94 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெ.நா.பாளையம், அன்னூா், காரமடை, பொள்ளாச்சி வடக்கு மற்றும் மாநகராட்சியில் ஒரு சில வாா்டுகளில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் காரணமாக திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் ஊழியா் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் இ-மொபிலிட்டி சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தில்லி காா் ஷோரூம் துப்பாக்கிச்சூடு வழக்கு கொல்கத்தாவில் ஒருவா் கைது

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயா்வு

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT