கோயம்புத்தூர்

குப்பைக் குவியலில் தீ விபத்து

DIN

கோவை: கோவை, சித்தாபுதூா் அருகே குப்பைக் குவியலில் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்.

கோவை சித்தாப்புதூா் மின்மயானம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு அருகே குப்பைகள் மலைபோல குவிந்துள்ளன.

இந்நிலையில், இங்கு குவிந்துள்ள குப்பைக் குவியலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென தீப் பிடித்தது. லேசாக பரவிய தீயானது, மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளித்தது.

இதைத் தொடா்ந்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் வேலுசாமி தலைமையில் 6 தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரைப் பீய்ச்சி தீயை அணைத்தனா். 30 நிமிடப் போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT