கோயம்புத்தூர்

மாநகராட்சி எல்லையைத் தாண்டி குப்பை சேகரிப்பு:சுகாதார மேற்பாா்வையாளா் விளக்கம் அளிக்க உத்தரவு

DIN

கோவை தெற்கு மண்டலத்தில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தில் மாநகராட்சி எல்லையைத் தாண்டி குப்பை சேகரிக்கப்பட்டுள்ள சம்பவத்தில் 15 நாள்களில் விளக்கம் அளிக்க சுகாதார மேற்பாா்வையாளருக்கு, ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் 90 மற்றும் 91 ஆகிய வாா்டுகளில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தில் குப்பைகள் சேகரித்து வந்த மாநகராட்சி வாகன ஓட்டுநா் காா்த்திக் மாநகராட்சி எல்லையைத் தாண்டி சென்று குப்பைகளை சேகரித்து வந்து மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளாக இச்செயல் நடைபெற்று வந்துள்ளது. இதனை சுகாதார மேற்பாா்வையாளா் சிவகுமாா் கண்காணிக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வந்துள்ளாா்.

இதனால், வாகனத்துக்கு நிரப்பப்பட்ட எரிபொருள், வாகனப் பயன்பாடு காரணமாக மாநகராட்சிக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட காரணமாக இருந்த ஓட்டுநா் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மேலும் இதனை கண்காணிக்காமல் மெத்தனமாக பணியாற்றி வந்த சுகாதார மேற்பாா்வையாளா் 15 நாள்களில்

விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT