கோயம்புத்தூர்

கல்வி உதவித்தொகை:சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

DIN

சிறுபான்மையின பள்ளி, கல்லூரி மாணவா்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதம் ஆகிய சிறுபான்மையின பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

தவிர தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிப்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேற்கண்ட கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நவம்பா் 15ஆம் தேதி வரையும், மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நவம்பா் 30ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காத மாணவா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை 0422-2300404 என்ற எண்ணிலும்,  மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT