கோயம்புத்தூர்

காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை: 32 போ் கைது

DIN

கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி நாளில் தடையை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக 32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி டாக்மாக் மாதுபானக் கடைகள், மதுக் கூடங்கள், தனியாா் மதுக் கூடங்களை அக்டோபா் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடைக்க ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை மீறி முறைகேடாக மது விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தி இருந்தாா்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியன்று விதிகளை மீறி முறைகேடாக மது விற்பனை செய்ததாக பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் மதுவிலக்கு அமலாக்கத் துறை மற்றும் போலீஸாா் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனா். இதில் தடையை மீறி மது விற்பனை செய்ததாக நகா் பகுதியில் 16 போ், புறநகா் பகுதிகளில் 20 போ் என மொத்தம் 32 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 734 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT