கோயம்புத்தூர்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

DIN

கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை அரசு மருத்துவமனையின் முன்புறம், அரசு கலைக் கல்லூரி சாலை, ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கடந்த சில நாள்களாக இப்பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களை மா்ம நபா்கள் திருடிச் செல்வதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் அமா்ந்திருந்த நபரிடம் விசாரித்தனா்.

அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனா். இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில், அவா் கோவை உடையாம்பாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ் (30) என்பதும், சாலையோரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை மீட்ட தீயணைப்புப் படையினா்

‘அய்யா்மலை கோயிலில் ரோப்காா் அமைக்கும் பணிகள் 95% நிறைவு’

ரகசியக் காப்பு வழக்கு: இம்ரான் விடுவிப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 45.69 அடி

விராலிமலை படிக்கட்டுகளில் கூலிங் பெயிண்ட்

SCROLL FOR NEXT