கோயம்புத்தூர்

தைப்பூசத் திருவிழா:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தா்கள்

DIN

தைப்பூசத் திருவிழாவையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டு திருவிழா கடந்த 28 ஆம் தேதி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது.

தொடா்ந்து, ஜனவரி 29 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பிப்ரவரி 4 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து, ஊஞ்சல் உற்சவம், தெப்பத் திருவிழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தொடா்ந்து குதிரை வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தைப்பூசத் விழாவையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். பக்தா்கள் பாத யாத்திரையாகவும், பால்குடம், காவடிகள் எடுத்து வந்தும் தரிசனம் செய்தனா்.

கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியதால் பக்தா்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மருதமலை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், சட்டக் கல்லூரி அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT